Stamp Today
*இன்று*
*உலகக் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம்*
ஜூன் 12, 2002 ஆண்டு முதன்முதலில் நிறுவப்பட்டது. ஐநா சபை மேற்கொண்ட குறிக்கோளானது உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர்கள் பற்றிய பாதுகாப்பு விழிப்புணர்வும், குழந்தை தொழிலாளர் சந்திக்கும் பிரச்சனையை சுட்டிக் காட்டவும், குழந்தை தொழிலாளர்களுக்கு வேண்டிய வழிக்காட்டுதலும் அரசாங்கம் வரையறுக்க வேண்டும். அரசின் கீழுள்ள உள்ளூர் அதிகாரிகள், தொழிலாளர்கள் கூட்டமைப்பு, நாகரீக சமுதாய மக்களாகிய நாம் அனைவரும் குழந்தை தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும்.
சஸ்டெனப்பில் வளர்ச்சி திட்டம்
சஸ்டெனப்பில் இலக்கானது நிலையான வளர்ச்சியே. இன்றைய தலைமுறையினரின் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ளும் வண்ணம் அமைந்துள்ளது. இதில் 12 வகையான இலக்குகளை இந்தியா வளர்ச்சிகாக 2030 உள்ளாகவே அடைய வேண்டியுள்ளது. இதன் கீழ் குழந்தை தொழிலாளர்களை குறிக்கவும், குழந்தை கடத்தல் மற்றும் குழந்தை தொழிலாளர் அடக்குமுறை போன்றவற்றை நிரந்தரமாக சமூகத்திலிருந்து அகலும் வண்ணமாகவும். இதனால் அனைவருக்கும் எளிதாக நிரந்தர வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதை குறிக்கோளாய் கொண்டுள்ளது.
குழந்தை தொழிலாளர்களாக ஏற்பட முக்கிய காரணங்கள்
இந்திய வளர்ச்சிக்கு முதல் படியே வறுமையை ஒழித்தல். தாய், தந்தை இழந்த குழந்தைகள், பெற்றோர்களுக்கு வேலையின்மை , விவசாயிகளின் தற்கொலை, உயிர்க்கொல்லி நோய் போன்ற காரணத்தினால் சமூகத்தில் பல அவலங்களை சந்திக்க வேண்டியுள்ளது. சமூக பாதுகாப்பின்மை, மற்ற குழந்தைகளுக்கு கிடைக்கும் கல்வியும், பொருளாதார வளர்ச்சியும் இக்குழந்தைகளால் பெறமுடியவில்லை. இதனால் இக்குழந்தைகள் பள்ளிப் படிப்பை பாதியிலேயே விடும் நிலை ஏற்படுகிறது. வறுமையால் வெளியே வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இந்தியாவில் குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான சட்டம்
14 வயதிற்கு குறைவான குழந்தைகள் குலத் தொழில் அல்லாது குடும்பத் தொழிலைத் தவிர்த்து மற்ற வேலைகளில் ஈடுபடுத்துவோருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும். குழந்தை தொழிலாளர் ஒழுங்குமுறை சீர்திருத்த மசோதாவானது 2012, ஆம் பிறப்பிக்கப்பட்டப் போது பதினான்கு வயதான குழந்தைகளை வேலையில் ஈடுப்படுத்தும் பெற்றோர்க்கு சிறை தண்டனை வழங்கப் பெறும். பதினாக்கு வயது முதல் பதினெட்டு வயதிற்கும் குறைவான குழந்தைகளை அபாயகரமான வேலைகளிலும் ஈடுபடுத்தல் கூடாது.
தீவிர முயற்சி
அரசாங்கம் இக்குழந்தை தொழிலாளர்களுக்கு எதிராக பல சட்டங்களை ஏற்றியுள்ளது. இருந்தபோதிலும் பெற்றோர்கள், சமுக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து சேவை பன்பான்மையோடு சற்று தீவிரமாக முயற்சி செய்தால் இதனை சமூகத்திலிருந்து முற்றிலும் ஒழிக்கலாம்.
*கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்குமாடல்ல மற்றை யவை.*
குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்பை ஏற்படுத்தி தருதலும். குழந்தைகள் அவ்வாய்ப்பின்னை பயன்படுத்திக் கொள்ளுதலும் மிக சிறந்தது. குழந்தைகளை பாட சாலைக்கு அனுப்புவோம், தொழில்சாலைகளுக்கு அல்ல.
*தமிழ்வாணன் அஞ்சல்தலை சேகரிப்பாளர்*
Comments